சென்னை

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கபடும் என அமைச்சர் சுந்தரராஜ் பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் கைத்தறி மற்றும் துணிநுல் துறை மானிய கோரிக்கை மீதான விவாததிற்க்கு பதில் அளித்து அமைச்சர் சுந்தரராஜ் துறை அறிவிப்புகளை வெளியிட்டார்.

நெசவாளர்களை ஊக்குவிக்க மேதினம் முதல் 10 சதவீதம் அடிப்படைக் கூலி 
உயர்வு உயர்த்தி வழங்கபடும்.இதன் மூலம் 1173 கைத்தறி சங்கங்களில் உள்ள நெசவாளர்கள் பயன் பெறுவார்கள்

.இதன் மூலம் ரூ.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.நெசவாளர்களின் குழந்தைகளின் மேற்படிப்பு உதவி தொகை 32 பிரிவு படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 3500.மற்றும் மேல்படிப்புக்கு ரூ.7500 வழங்கபடும்

.இளைய தலைமுறையினர் நெசவு தொழிலை மேற்கொள்ள பரமகுடியில் வடிவமைப்பு பயிற்சி மையம் ரூ.54.28 கோடியில் அமைக்கபடும்.

நெசவாளர் கூட்டுறவு சங்ககளுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கபடும் வட்டிமானிய தொகை இனி மாதம்தோறும் வழங்கபடும்.கும்பகோணம்,காஞ்சிபுரத்தில் ரூ.92.19 இலட்சம் மதீப்பீட்டில் நெசவாளர் பயிற்சி மையங்கள் அமைக்கபடும்.
சென்னை கோ ஆப்டேக்ஸ் வளாகத்தில் ரூ.25 இலட்சம் செலவில் ஜவுளி நுலகம் அமைக்கபடும்.செயலிழந்த நிலையிலுள்ள 13 கூட்டுறவு நுற்பாலைகளின் நிலைப்பாட்டினை ஆராய உயர்மட்ட குழு அமைக்கபடும்.இராமநாதபுரம் மாவட்ட நுற்பாலை ரூ,5,75 கோடி மதீப்பீட்டில் நவீனப்படுத்தபட்டு மீண்டும் செயல்படுத்தபடும்.
இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -