- Back to Home »
- இந்தியாவை நம்பியே நாங்கள் உள்ளோம் -செஷல்ஸ் ஜனாதிபதி »
- இந்தியாவை நம்பியே நாங்கள் உள்ளோம் -செஷல்ஸ் ஜனாதிபதி
இந்தியாவை நம்பியே செஷல்ஸ் தீவு உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்சல் இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அரசு முறைப்பயணமாக தென்னப்பிரிக்கா, செஷல்ஸ் தீவுகள் சென்றுள்ளார்.நேற்று செஷல்ஸ் ஜனாதிபதி மிச்சலை சந்தித்து பேசினார். அப்போது செஷல்ஸ் ஜனாதிபதி, கடற்கொள்ளையர்களிடமிருந்து செஷல்ஸ் தீவுகளை இந்திய கடற்படை பாதுகாத்து வருகிறது.
எனவே செஷல்ஸ் இந்தியாவிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் ஐ.நாவில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகுவதற்கு செஷல்ஸ் ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.மேலும் இருநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுதிட்டனர்.

