- Back to Home »
- திமுக உறுப்பினர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு »
- திமுக உறுப்பினர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு:அன்பழகன் !
சென்னை: புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இத குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுகவில் புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்னவே தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்ற சென்றுவிட்டனர்.
இதனால் மாவட்ட, ஒன்றிய, நகர பகுதி, பேரூர்க்கழக நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று, உறுப்பினர் சேர்த்தலுக்கான காலக்கெடு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.