கோரிக்கையை வலியுறுத்தி கேபிள் டி வி ஆப்ரேட்டர்கள் பொதுநலசங்கம்
முதல்வர் தரிசன பேரணி

சென்னை

கோரிக்கையை வலியுறுத்தி கேபிள் டி வி ஆப்ரேட்டர்கள் பொதுநலசங்கம்
முதல்வர் தரிசன பேரணி நடத்த முடிவு செய்யபட்டுள்ளது

இது குறித்து தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சகிலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

தமிழக முதல்வர் கேபிள் டி,வி ஆப்ரேட்டர்கள் நலனை பாதுகாக்க அரசு கேபிள் டி வி கார்ப்ரேஷன் துவங்கபட்டது
ஆனால் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டுவருகின்றனர்
இது வரை பல மனுக்கள் அளிக்கபட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை

கடந்த 10 ஆண்டிற்க்கும் மேலாக ஏகபோக நிறுவனமாக செயல்பட்டுவந்த நிறுவனம் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரமித்துள்ளது
சன் டிவி குழுமத்திற்கு மாதந்தோறும் 14 கோடி வரை வழங்க அதிகாரிகள் முனைப்பு காட்டிவருகின்றனர்
இதனை தடுத்து நிறுத்த வேண்டும்
பராமரிப்பு செலவை ஈடு செய்ய 100 கட்டனமாக வசுல் செய்ய அறிவிக்க வேண்டும்
பல இடங்களில் அரசியல் கட்சியினரின் தலையிடுயுள்ளது
கடலுர்,விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 9 கோடி அளவிற்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது
இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை இதுபோன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுத்தி வரும் மார்ச் மாதம் சென்னையில் முதல்வர் தரிசன பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -