தமிழக முதல்வரால் மட்டும்தான் கூடங்குளம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தமுடியும்

தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் திட்டவட்டம்


சென்னை

தமிழக முதல்வரால் மட்டும்தான் கூடங்குளம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தமுடியும் என
தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் தெரிவித்துள்ளது


தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் மாநில தலைவர் அருள்தாஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியாதாவது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் மின் வெட்டு பிரச்சனையை தீர்க்க ஒரே தீர்வு கூடங்குளம் அணுமின் நிலைய
திட்டத்தை உடனே துவக்குவதுதான்

ஒரு சில அமைப்புகள் மக்களை தேவையில்லாமல் திசை திருப்பி தங்களுடைய சுய லாபத்திற்காக பேராட்டம் நடத்திவருகின்றனர்
பல்வேறு அணு விஞ்ஞானிகள் அணு உலை பாதுகாப்பது என்று கூறிய பிறகும் போராட்டம் நடத்துவது தேவையில்லாதது


தற்போதுள்ள சுழ்நிலையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது வரவேற்றதக்கது.
 இந்த பிரச்சனையை தமிழக முதல்வரால் மட்டுமே தீர்க்கமுடியும்

மத்திய அரசு உடனடியாக அணு உலையை திறக்க வலியுத்தி வரும் 13 ந் தேதி சென்னை மெமோரியல் ஹாலில் ஆர்பாட்டம் நடத்தபடும் என தெரிவித்தார்

உடன் வடசென்னை மாவட்ட செயலர் தேசிகமூர்த்தி ,பொது செயலர் பெனான்சிஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர்,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -