- Back to Home »
- மருத்துவகல்வி மாணவர் சேர்க்கையை கண்காணிக்க குழு »
- மருத்துவகல்வி மாணவர் சேர்க்கையை கண்காணிக்க குழு
மருத்துவகல்வி மாணவர் சேர்க்கையை
கண்காணிக்க குழு

தமிழக அரசு அறிவிப்பு
சென்னை
தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
சுயநிதி மருத்துவம்,
மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும்
மற்றும் கண்காணிக்கும் குழு
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சிறுபான்மை
மற்றும் சிறுபான்மை அல்லாத சுயநிதி கல்லூரிகளில், நேர்மையாகவும், வெளிப்பபடையாகவும்
, தவறான முறையில் பயனடையாமல் இருக்கும்படியாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற உறுதிபடுத்துவதற்கு,
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி .அ.அப்துல் ஹாதி தலைமையின் கீழ்சுயநிதி மருத்துவகல்விக்கான
மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் மற்றும் கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது
.இக்குழுவில் உறுப்பினர் செயலராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன்
, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் . மயில்வாகனன் நடராஜன்,
. ஆனந்த கண்ணன், . எஸ்.கே. ராஜன் ஆகியோர் இதர உறுப்பினர்களாக நியமிக்கபட்டுள்ளன
2012-2013 ம் கல்வியாண்டிற்கு மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் மருத்துவம்
பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர் ,பி.ஓ.ட்டி, பி.பி.ட்டி ,இந்திய மருத்துவம் தனியார் சுயநிதி நிர்வாகக் கல்லூரிகளுக்கான
, 2012-2013 ம் கல்வியாண்டிற்கு உரிய விதிமுறைகளின் படி,
மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள
, தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிக்கோ அல்லது உரிய சங்கத்திற்கோ மாணவர்
சேர்க்கைக்கான பணியினை மேற்கொள்ள அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை
, இனிதான் உரிய முறையில் வழங்கப்படும் என்பதை மேற்படி குழு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
எந்த ஒரு சங்கமோ அல்லது கல்லூரியோ,
தன்னிச்சையாக, மேற்கண்ட படிப்புகளுக்கு 2012-2013 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை,
குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக்கூடாது.
எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் கல்லூரிகள் அல்லது சங்கங்கள் வழங்கும் விளம்பரங்கள்
விண்ணப்பங்கள் கண்காணிப்புக்குழுவின் அனுமதி பெற்று வழங்கப்படுகின்றதா என்பதனை
உறுதி செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறது
கண்காணிப்புக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் தாலுக்கா,
குன்னவலம் கிராமத்தில் உள்ள டி.டி. மருத்துவ கல்லூரி தன்னிச்சையாகவும்,குழுவின்
அனுமதி பெறாமலும் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தினை நாளேடு ஒன்றில் 01.02.2012 ம் தேதி செய்துள்ளது.
அவ்வாறு செய்து மாணவர் சேர்க்கை செய்வது செல்லத்தக்கதல்ல.
மாணவர்கள், பெற்றோர்கள் நலனைக் கருதி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது

.
அவ்வாறு குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது எனவும்கண்காணிப்புக்குழு தெரிவித்துக் கொள்கிறது.