ஏற்கனவே ஒரு சில பாடகிகள் நடிப்பிலும் இறங்கி விட்டதால் சின்மயி தினமும் ஒரு நடிப்பு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். ஏற்கனவே எனக்கு டப்பிங் பேசவும் படவுமே நேரம் போதவில்லை.
இது போதாதென்று, சில வி.ஐ.பி டைரக்டர்கள் உட்பட பலரும் என்னை படங்களில் நடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு துவக்கத்திலிருந்தே நடிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. யாரையாவது காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டுமென்ற முடிவிலிருந்த எனக்கு காதலிக்க கூட நேரம் கிடைக்கவில்லை. பொறுத்துப்பொறுத்து பார்த்த என் அம்மா இப்போது எல்லா மேட்ரிமோனியல்கள் வாயிலாகவும் எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டார். வேறு வழி அம்மாவின்தேடுதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன். நேரம் சரியாக இருந்தால் நடக்க வேண்டியது தன்னால் நடக்கும் என்பது என் பாலிசி. மாப்பிள்ளை ஓகே ஆனால் இந்த வருடக் கடைசியில் திருமணத்தை வைத்துக்கொள்வதாக திட்டமாம் சின்மயிக்கு. பொண்ணு தேடுறவங்க சின்மயி வாய்ஸ் கூட சிங்க் ஆகுதான்னு பாருங்க

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -