ஷங்கரின் நண்பனின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். த்ரீ இடியட்ஸை ஷங்கர் சார் தமிழில் இயக்கப்போகிறார் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்த உடனேயே ஷங்கர் சாரை நேரில் சந்தித்து எனக்கும் ஏதாவது ஒரு இடியட்டா நடிக்கவாய்ப்பு கொடுங்க சார்ன்னு கேக்கலாமுன்னு நினைச்சிட்டிருந்தப்ப அதுக்கு அவசியமே இல்லாம ஷங்கர் சார் ஆபிசுலருந்து போன் வந்து எனக்கு மாதவன் நடிச்ச கேரக்டர் நடிக்க சான்ஸும் வந்தது. இந்த கேரக்டர்ல மாதவன் சார் இந்தியில எப்படி பண்ணியிருந்தார்னு இப்ப வரைக்கும் பாக்கல. நண்பன் ஷூட்டிங் ஸ்பாட்டுல எனக்கு நெருக்கமான நண்பன் யார்னு கேட்டா படத்தோட கேமராமேன் மனோஜ் பரமஹம்சாவைத்தான் சொல்வேன். ஏன்னா என்னோட 'பம்பரக்கண்ணாலே' படத்துக்கு மனோஜ் தான் இணை ஒளிப்பதிவாளர். அந்த நட்பை மறக்காம எனக்கு படப்பிடிப்பு முழுக்கவே நல்ல கம்பெனி கொடுத்தார் மனோஜ் என்கிறார் ஸ்ரீகாந்த்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -