- Back to Home »
- இனிய வருத்தம் »
- இனிய வருத்தம்
பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும், கொடிவீரனும்' தள்ளிப்போனதில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார் இனியா. இந்த கேப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இனியாவையும், கார்த்திகாவையும் படத்திலிருந்து பாரதிராஜா தூக்கிவிட்டார் என்று கிளம்பும் செய்திகளும் இனியாவை மேலும் கவலை அடையச் செய்திருக்கின்றன. ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. முல்லைப்பெரியாறு பிரச்சினைக்குப்
பிறகு, படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்குன்னு மேனேஜர்கள் தான் பேசினாங்க. டைரக்டர் எதுவும் சொல்லலை. ஆனால் அன்னக்கொடி துவங்கின முதல் சுமார் ஒரு மணி நேரம் பாரதிராஜா சார் எங்கிட்ட பேசிட்டு இருந்தார். அப்ப பத்திரிகைகாரங்க உன்ன மாதிரி வளந்துட்டு வர்ற நடிகைகளைப் பத்தி கன்னாபின்னான்னு எழுதுவாங்க. அந்த செய்திகளைக் கடந்து வந்து நீ எப்பிடி ஜெயிக்கிறேங்கிறதுலதான் உன் திறமை இருக்குன்னார். அந்த மந்திர வார்த்தைகள அப்படியே மனசுல கப்புன்னு புடிச்சிக்கிட்டேன். அதனால கிசுகிசுக்கள் படிக்கிறப்ப லேசா கவலைப்படுவேனே ஒழிய கலங்கி நிக்க மாட்டேன் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார் இனியா.