கிரிக்கெட்டில் ஸ்ரீசாந்துக்கு இது பொல்லாதகாலம்தான். தேவைக்கு அதிகமாகவே அவருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இந்த இடைவெளியில் அவர் ஒன்றும் சும்மா இல்லை. ஸ்ரீ36 என்ற பெயரில் தனக்கு என ஒரு பேண்ட் குரூப் வைத்துக்கொண்டு 'தேசம்' என்ற ஒரு இசை ஆல்பத்தை தயாரித்து முடித்திருக்கிறார். இந்த ஆல்பத்தில் ஆடுவதற்கென்றே பிரபல மாஸ்டர்களிடம் டான்ஸ் கற்றுக் கொண்டாராம் ஸ்ரீசாந்த். கிரிக்கெட்டை முற்றிலும் மறந்து விட்டு நான் இந்த ஆல்பத்தை உருவாக்கவில்லை. நடுநடுவே தீவிரமான பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டபடியேதான் இந்த ஆல்பத்தை தயாரித்தேன். எனக்கு சினிமா ஆசை இருந்தாலும் இப்போதைக்கு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். நடுவில் சற்று ஓய்வு கிடைக்கும்போது, இதுபோல் சின்னச்சின்ன ஆல்பங்கள் பண்ணிப்பழகிகொண்டு, கிரிக்கெட்டை விட்டு ரிடையர் ஆனபிறகு சினிமாவில் பின்னி எடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீசாந்தின் ஆசையாம்.
முதல்ல கிரிக்கெட்ல சரியா ஸ்பின்னுங்க.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -