தனது 'மெரினா' பட ஆடியோ வெளியீட்டின்போது, மிகவும் நெகிழ்ந்து காணப் பட்டார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் டி.வி.யில் மிகவும் பாப்புலாரானவர் என்றாலும் கூட சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு புதுமுகம்தான்.அதனால் விளம்பர ஏரியாவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமே என்று யோசித்து, அதற்காகவே தனியாக ஒரு பாடல் ரெகார்ட் பண்ணி சில வி.ஐ.பி. களை நடிக்கவைத்து இவரைப் புரமோட் பண்ணலாமென்று நினைத்தேன். என் ஆசைப்படியே அந்தப்பாடலில் சசிக்குமார், அமீர், சிநேகா மற்றும் விக்ரம் ஆகியோர் பணம் எதுவும் வாங்காமல் நடித்துக்கொடுத்ததை மறக்கமுடியாது. அதுவும் விக்ரமும், சிநேகாவும் எனக்கு இதற்கு முன் பரிச்சயமே இல்லாதவர்கள். மறுநாள் 'ராஜபாட்டை' ரிலீஸை வைத்துக்கொண்டு விக்ரம் கொஞ்சம் கூட டென்சன் இல்லாமல் எல்லா ஷாட்டிலுமே சிங்கிள் டேக் வாங்கி நடித்துவிட்டுப்போனார்' என்று சிலாகிக்கிறார் மெரினா பாண்டிராஜ்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -