- Back to Home »
- தரஉறுதி சேவை துறையை தேர்வு செய்யுங்கள் »
- தரஉறுதி சேவை துறையை தேர்வு செய்யுங்கள்
தரஉறுதி சேவை துறையை
மாணவர்கள் தேர்வுசெய்ய
டி.சி.எஸ். துணைத்தலைவர் அறிவுரை
சென்னை,
நாளுக்கு நாள்வளர்ச்சி நோக்கி‘ச் செல்லும் தரஉறுதி மற்றும் ஆய்வு துறையில் மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும் என்று டாடா கன்சல்டன்சி துணைத் தலைவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை வள்ளியம்மைஇன்ஜினியரிங் கல்லூரியில் டாடா கன்சல்டன்சி சார்பில் தர உறுதி மற்றும் ஆய்வு என்ற தலைப்பில்ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கைதுவக்கி வைத்து டி.சி.எஸ். துணை தலைவர் சிவகணேசன் பேசியதாவது,
குவாலிட்டி அஷ்யூரன்ஸ்என்பது வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட துறை.. மாணவர்கள் இந்த குவாலிட்டிஅஷ்யூரன்ஸ் து‘றையில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் இந்ததுறையை தேர்வு செய்யலாம்.
உலகில் இந்த துறைமட்டும் ஆட்குறைப்பு, பொருளாதார மந்தம் போன்றவை ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத துறை.தர உறுதி மற்றும் சோதனை என்ற இத்துறை, ஒரு தொடர் சேவை கொண்டது. எனவே, இந்த துறை தொடர்ந்துசெயலாக்கத்திலேயே இருக்கும். நாள்தோறும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஆரம்பித்துபெரிய பெரிய கம்பெனிகள் வரை தரத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறோம். பெரிய கம்பெனிகள்கூட தங்கள் நிறுவன தயாரிப்பில் தர உறுதி மற்றும் சோதனைகளில் விட்டுக்கொடுப்பதில்லை.
ஒரு நிறுவனம் ஒருபொருளை பிராண்ட் பெயரில் சந்தைபடுத்தும்போது, அந்த பிராண்ட் பெயரை தக்க வைத்துக் கொள்ளநினைக்கும். எனவே, அது ஒரு தொடர் நடவடிக்கைதான். அந்த நடவடிக்கை ஒரு நாளிலோ, ஒரு ஆண்டிலோமுடிவடைவதில்லை. ஒவ்வொரு கம்பெனி‘யும் வாடிக்கையாளரை தக்க வைத்து கொள்ள கடுமையாக முயற்சிக்கின்றன.எனவே தரத்தின் காரணமாக வாடிக்கையாளர்களை இழக்க அக் கம்பெனிகள் விரும்புவதில்லை. இத்துறையானதுஆண்டுக்கு வளர்ச்சி 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக இருக்கிறது. 2015 ஆண்டு இத்துறையில்வளர்ச்சி 40 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும்.
எனவே மாணவர்கள்இத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். இத்துறையில் நிபுணர்களின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந் நிகழ்ச்சியில்பல்கலைக் கழக வேந்தர் டி.ஆர்.பச்சைமுத்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.