- Back to Home »
- அந்தச்செய்தியில் துளியும் உண்மை இல்லை - சந்தோஷலட்சுமி »
- அந்தச்செய்தியில் துளியும் உண்மை இல்லை - சந்தோஷலட்சுமி
உங்கள் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இவ்வளவு ஜாலியான ஒருயூனிட்டை இந்தியா முழுக்க தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது என்று சர்டிபிகேட் தருகிறார் விஜயலட்சுமி. வாய்முழுக்க பல்லாக அவரால் அப்படி புகழ்ந்து தள்ளப்படும் அந்த யூனிட் தமிழ்ப்படம் தந்த சி.எஸ். அமுதனின் ரெண்டாவதுபடம் யூனிட். இந்த டைரக்டருடன் கூட்டு சேர்ந்ததாலோ படத்தின் மூன்று ஹீரோக்களான விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சதா ஜோக்குகளாக அடித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஷூட்டிங் வந்திருக்கிறோமா அல்லது பிக்னிக்கா என்று கேட்குமளவுக்கு படப்பிடிப்பு படு ஜாலியாகப்போகிறது. இந்தப் படத்தில் நான் ஒரு சி.பி.ஐ. ஆபிஸர் வேடத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக யாரோ புரளியைக்கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தச்செய்தியில் துளியும் உண்மை இல்லை. நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பது இப்போதைக்கு
சஸ்பென்ஸ்தான் என்கிறார் சிரிப்புலட்சுமி