பொங்கலுக்கு இரண்டே படங்கள் தான் ரிலீஸ் என்று இருந்த வேலையில் திடீரென, விதார்த்தின் கொள்ளைக்காரன் களத்தில் குதித்திருப்பது பலருக்கு புருவம் உயரச் செய்திருக்கிறது. ஆனால் படத்தின் இயக்குனர் தமிழ்செல்வனும் கதாநாயகன் விதார்த்தும் உச்சக்கட்ட தன்னம்பிக்கையுடன் காட்சியளிக்கிறார்கள். நாங்கள் ஷங்கரின் நண்பனோடோ, லிங்குசாமியின் வேட்டை படத்தோடோ மோதுகிற எண்ணத்தில் பொங்கலுக்கு வரவில்லை. பொங்கலுக்கு ஏழெட்டு படங்கள் ரிலீஸாகும். அதனால் நாம் பிப்ரவரியில் வரலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் வெறுமனே இரண்டே படங்கள் தான் ரிலீஸாகப்போகிறது என்று தெரிந்ததும் எங்களை நம்பி அல்ல எங்கள் படத்தின் கதையை நம்பி தைரியமாக களத்தில் குதித்துவிட்டோம் என்கிறார்கள் இருவரும் கோரஸாக. கதையை நம்பினோர் கைவிடப்படார்ங்கிறது தமிழ் சினிமாவோட தாரக மந்திரம்.
அந்த மந்திரத்தை நம்பி தந்திரமா வர்றீங்க. வாங்க பாக்கலாம்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -