- Back to Home »
- அனுஷ்காவைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது என்கிறார் »
- அனுஷ்காவைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது என்கிறார் -சுராஜ்
விரைவிலேயே அனுஷ்கா தனது மேனேஜரை மாற்றிவிட்டு இயக்குனர்
சுராஜை நியமித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு அனுஷ்காவைப் புகழ்ந்து தள்ளுகிறார் சுராஜ்.'நானும் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்து எத்தனையோ நடிகைகளைப்பார்த்துவிட்டேன். கரெக்ட் டைமுக்கு ஸ்பாட்டுக்கு வருகிறவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கூட அங்கு வந்தபிறகு மேக்கப், டச்சப் என்று கொஞ்சமாவது டைம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அனுஷ்காவோ ஸ்பாட்டுக்கு முதல் ஆளாய் வந்துசேர்வதோடு மேக்கப், டச்சப் எல்லாம் முடித்து ஷாட்டுக்கு ரெடியாய்நிற்கிறார். காலையில் படப்பிடிப்பு தளத்துக்கு சரியான நேரத்துக்கு இப்படி வந்து நிற்கிற அனுஷ்காவைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம்தொற்றிக்கொள்கிறது என்கிறார் சுராஜ். பாத்து சுராஜ் சார், இப்பிடி ரொம்ப புகழ்ந்தீங்கன்னா நம்ம ஆளுங்க கிசுகிசு எழுதிடுவாங்க..