- Back to Home »
- விஷால மனசு »
- விஷால மனசு
தீராத விளையாட்டுப்பிள்ளை' சுமாராக ஓடியும், திரும்ப அதே டைரக்டருக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். என்னைப்பொருத்தவரை திரு ஒரு திறமையான டைரக்டர் தான். ஒரு முறை கோட்டை விட்டார் என்பதற்காக, அடுத்து அவர் சொன்ன நல்லகதையில் நடிக்காமல் இருக்க முடியுமா? என்று கேட்கும் விஷால் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பது பழைய செய்தி. புதிய செய்தி, தனது புதிய படத்தின் படப்பிடிப்பு நடக்கும் சிவகங்கைக்கு விஷாலை வரவழைத்து, அவர்கள் இணைய இருக்கும் படத்தின் கதையைச்சொன்னது. இதுக்கு முந்தி 'அவன் இவன்' கதை சொன்னப்ப அஞ்சே நிமிஷத்துல சொன்னார். இப்ப சிவகங்கை போயிருந்தப்ப, ரொம்ப நீளமா ஒரு மணி நேரத்துக்கு ஒரு கதை சொன்னார். அந்தக்கதைக்கு அப்படியே சரண்டர் ஆயிட்டேன். இப்பவே மனசலவுல அந்தப்படத்துக்கு தயாராக ஆரம்பிச்சிட்டேன் என்கிறார் விஷால்.