என் முதல் படத்தைக் கூட நான் இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்ததில்லை என்கிற த்ரிஷாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம் தெரிகிறது. காரணம் விரைவில் தெலுங்கில் ரிலீஸாகவிருக்கிற 'பாட்கார்ட்' படம். அந்தப்படத்தை த்ரிஷா அவ்வளவு ஸ்பெஷலாக எதிர்பார்ப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். அடுத்து தமிழில் எடுக்கப்பட்ட காவலனில் அசின் நடித்திருந்தார். இந்தி பாடிகார்டில் கரீனா கபூர் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் த்ரிஷா. படம் ரிலீசானதும் கண்டிப்பாக மற்ற நடிகைகளுடன்
கம்பேர் பண்ணிப்பார்ப்பார்கள் அல்லவா? அதற்காகத்தான் த்ரிஷாவுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு. ஏற்கனவே படத்தின் ரீ-ரெகார்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இசையமைப்பாளர் தமன் போன் செய்து மேடம் மத்த மூனு பேரையும் பெர்ஃபார்மன்ஸ்ல நீங்க தூக்கி சாப்பிட்டுட்டீங்க' என்றாராம். இதே கருத்து மக்கள் கிட்டருந்து வந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்பதே த்ரிஷாவின் எதிர்பார்ப்பு. படம் வரட்டும் பாத்த உடனே போன் பண்றோம்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -