- Back to Home »
- இந்த ஆண்டு தியாகராஜன் இயக்கும் படம் எதிலும் நடிக்கவில்லை -பிரஷாந்த் »
- இந்த ஆண்டு தியாகராஜன் இயக்கும் படம் எதிலும் நடிக்கவில்லை -பிரஷாந்த்
பொன்னர்சங்கருக்கும், மம்பட்டியானுக்கும் வளர்த்த தாடியையும் நீள முடியையும் ஒட்ட வெட்டி ஃபிரஷாக ஆகிவிட்டார் பிரஷாந்த். மேற்கண்ட இரு படங்களுக்காக கடந்த மூன்று வருடங்களாக ஒரு அழுக்குப்பையனாகவே அலைந்தேன். இப்போது முடியைக்குறைத்து, தாடி மீசையை மழித்து, ஒரு பத்து கிலோ வெயிட் குறைத்து சின்ன பையனாகவே மாறிவிட்டேன். வரும் பொங்கல் முடிந்த பிறகு பெரிய
டைரக்டர்களுடன் நான் இணையும் மூன்று படங்களை அறிவிக்க இருக்கிறேன். அதில் ஒரு படம்முழுக்கமுழுக்க இசையையும் நடனத்தையும் மட்டுமே மையப் படுத்தி இருப்பதால் தினமும் பழையபடி தவறாமல் நடன வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்திருக்கிறேன். புத்தாண்டு பிறந்ததை ஒட்டி சில நண்பர்கள் மீண்டும் என் திருமண பேச்சை ஆரம்பிக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சினிமாவில்
பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போதைக்கு எனக்கு இருக்கிறது. அதுவரை என் திருமணத்தைப் பற்றி நான் யோசிப்பதாக இல்லை என்கிற பிரஷாந்த் இந்த ஆண்டு தந்தை தியாகராஜன் இயக்கும் படம் எதிலும் நடிக்கவில்லையாம்.