- Back to Home »
- திருச்சியில் மண்டல மகளிரியல் சங்கம் துவக்கம்
திருச்சி: திருச்சியில் மண்டல மகளிரியல் சங்க துவங்க விழா நேற்று நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் மீனா தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டு பேசுகையில், மரபு ரீதியான பிரச்னைகளும், படிப்புகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்திரா காந்தி பிரதமரான பின்னர்தான் பெண்கல்வி இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண்கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர் என்றார்.
கலெக்டர் ஜெயஸ்ரீ, பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிரியல் மைய இயக்குநர் மணிமேகலை, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக மகளிரியல் மைய இயக்குனர் லீலாவதி, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.