என் கணவர் மீது எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. அவரைப்ப்ற்றியும் ஸ்ருதிஹாசனைப்பற்றியும் வருகிற செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று வதந்திகளை கடுமையாக மறுக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். ஸ்ருதி எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே ஒரு நல்ல தோழி.என் கணவருடன் என்றுமே அவர் தப்பான நோக்கத்தில் பழகியதில்லை. அதே போல் தனுஷ் மாதிரி ஒரு மனைவி ஆதரவாளர் வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. நான் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளவிரும்பினால் உடனே சென்னையிலேயே சிறந்த பரத
நாட்டிய வாத்தியாரைத்தேட ஆரம்பித்து விடுவார். நான் படம் இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவுடன் மறு பேச்சு பேசாமல்முழு நம்பிக்கையுடன் இறங்கி இன்றைக்கு மொத்த இண்டஸ்ட்ரியும் எதிர்பார்க்கும் ஒரு படமாக '3' உருவாக காரணமாக இருந்தார்.அதனால் அவரையும் ஸ்ருதியையும் இணைத்துப்பேசப் படும் எந்த செய்தியையும் ஆரம்பத்திலிர்ந்தே நான் நம்புவதில்லை என்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -