'மவுன குரு' படத்தின் மிகப்பெரிய ஆச்சரியங்களுல் உமாரியாஸ்கானும் ஒன்று. கர்ப்பிணி போலீஸாக மந்தமான நடவடிக்கைகளில் அனைவரது மனம் கவர்ந்தவர். படம் பார்த்துவிட்டு பாலாவில் துவங்கி சமுத்திரக்கனி வரை ஏகப்பட்ட டைரக்டர்கள் பாராட்டினார்களாம். இந்த பாராட்டெல்லாம் இயக்குனர் சாந்தக்குமாரைத்தாம் போய்ச்சேர வேண்டும் அவரது பெயரைப்போலவே அவ்வளவு சாந்தமாக என்னிடம் வேலை வாங்கினார். என்னிடம் மட்டுமல்ல யூனிட்டில் யாரிடமும் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. இந்த பாராட்டு எனக்கு அன்பே சிவம்' படத்திலேயே கிடைத்திருக்கவேண்டியது. ஷுட்டிங் ஸ்பாட்டில் எனது நடிப்பை கமல் பலமுறை மனந்திறந்து பாராட்டினார். ஆனால் எனது துரதிருஷ்டம் நான் நடித்த காட்சிகள் எல்லாம் எடிட்டிங்கில் போய்
விட்டது.சரி 'மவுன குரு' மூலம் தான் எனக்கு பிரேக் கிடைக்க வேண்டும்என்று இருந்திருக்கிறது என்னும் உமாரியாஸ் கான் அம்மா வேடங்களில் நடிப்பதை அறவே விரும்பவில்லையாம்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -