ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் புதன்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டயைடுத்து நேற்றிரவு அவர்கள் வீடு திரும்பினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற அலிவார், மாரி, சந்திரன், பத்மநாபன், ஜஸ்டின் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு தமிழ்நாடு முழுவதும் மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல வித போராட்டங்களையும் அவர்கள் அறிவித்திருந்தனர் இந்த நிலையில் கடந்த 14ம் தேதி அவர்கள் ஐந்து பேரையில் இலங்கை கடற்படை விடுவித்துள்ளது. இதனையடுத்து விசைப்படகு மூலம் வியாழக்கிழமை இரவு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

தங்கச்சி மடம் மீனவர்கள்

இதனிடையே, கடந்த மாதம் 28 ஆம் தேதி, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை மீட்கக்கோரி இன்று இரண்டாவது கட்டமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -