தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் தேனியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொர்பாக அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக சார்பில் சமீபத்தில் தமிழகம் தழுவிய உண்ணாவிரதம் மற்றும் ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.

அதன் பின்னர் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இந்த வரிசையில் சிபிஐ சார்பில் இன்று தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தா.பாண்டியன் தலைமையில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -