டெல்லி: பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்களில் 180 பேர் குண்டர்கள் என்று ஹஸாரே கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது, பாராளுமன்றத்திற்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி.க்களில் சுமார் 180 பேர் 'குண்டர்கள்' (கிரிமினல் வழக்கை சந்தித்து வருபவர்கள்) என்று தெரிவித்தார்.

அன்னா ஹசாரேவின் இந்த கருத்திற்கு ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் கூறுகையில், "அன்னா ஹசாரேவின் இந்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த கருத்து நாட்டை கலக பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும். எனவே, அவர் உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்'' என்று தெரிவித்தார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -