மும்பை: வடக்கு மும்பையில் உள்ள கொரேகான் பகுதியில் காங்கிரஸார் தங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடினர். அந்த விழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது.

கடந்த 9ம் தேதி காங்கிரஸ் தலைவர் சேனியா காந்தி தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார். வடக்கு மும்பையில் உள்ள கொரேகான் பகுதியில் காங்கிரஸார் சோனியாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர். அந்த விழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது.

இது குறித்து கேள்விப்பட்ட மும்பை பகுதி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நிஸாமுத்தீன் ரையன் கூறியதாவது,

சோனியா காநதியின் பிறந்தநாள் விழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்தது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற சம்பவங்களால் கட்சி பெயர் தான் கெடும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே எனக்குத் தெரியாது. அந்த விழா சிடியைப் பார்த்து இது குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை மும்பை பகுதி காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இது குறித்து அந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் கூறுகையில், ஆபாச நடனம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் இருந்தபோது நாட்டுப்பற்று பாடல்கள் தான் ஒலித்தன. நான் அங்கிருந்து கிளம்பியதும் ஆபாச நடனம் நடந்ததா என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அடையாளம் தெரியாதவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளால் கட்சியின் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்றார்கள்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -