தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை பெரிய மாயத் தேவர், தாயார் மீனாட்சியம்மாள் ( எ ) கருத்தம்மாள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி. இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். "ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார். ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ( "அதிகாரம்" ), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார். அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா மற்றும் பேத்தி.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய படங்கள்
திரைப்படத்தின் பெயர்வெளியான ஆண்டுஓடியநாட்கள்
16 வயதினிலே197730 வாரம்
கிழக்கே போகும் ரயில்197852 வாரம்
சிகப்பு ரோஜாக்கள்197825 வாரம்
புதிய வார்ப்புகள்197925 வாரம்
நிறம் மாறாத பூக்கள்1979100 நாள்(இலங்கையில் 52 வாரம்)
ஸோல்வா ஸாவன்(ஹிந்தி)1979கல்கத்தாவில் 25 வாரம்
யார் குலாபி(தெலுங்கு)1979 
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்)1980 
நிழல்கள்1980 
நிறம் மாறாத பூக்கள்(மலையாளம்)1980 
ரெட் ரோஸஸ்(ஹிந்தி)1980 
அலைகள் ஓய்வதில்லை198125 வாரம்
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981100 நாள்
டிக் டிக் டிக்1981 
காதல் ஓவியம்1982 
ராகமாலிகா1982100 நாள்
வாலிபமே வா வா1982131 நாள்
மண்வாசனை1983286 நாள்
லவ்வர்ஸ் (ஹிந்தி) 1983 
புதுமைப்பெண்1984100 நாள்
மெல்லப் பேசுங்கள்(தயாரிப்பு)1984100 நாள்
சவரே வாலி கரடி(ஹிந்தி)1984 
தாவணிக் கனவுகள்(நடிப்பு மட்டும்) 1984100 நாள்
ஒரு கைதியின் டைரி1985100 நாள்
முதல் மரியாதை1985130 நாள்
யுவதரம் பிலிசிந்தி(தெலுங்கு)1985 
ஈதரம் இல்லாளு(தெலுங்கு)1985 
கைதிபேட்டா (தெலுங்கு)1985 
கடலோரக் கவிதைகள்1986100 நாள்
நீதானா அந்தக் குயில்(திரைக்கதை மட்டும்)1986100 நாள்
வேதம் புதிது1987 
ஜமதக் கனி(தெலுங்கு)1987100 நாள்
கொடி பறக்குது1988 
நாற்காலிக் கனவுகள்(டப்பிங்)1988 
என் உயிர்த் தோழன்1990 
புது நெல்லு புது நாத்து1991 
நாடோடித் தென்றல்1992 
கேப்டன் மகள்1993 
கிழக்குச் சீமையிலே1993 
கருத்தம்மா 1994 
பசும்பொன்1995 
தமிழ் செல்வன்1996 
அந்தி மந்தாரை1996 
தாஜ்மகால்1999 
கடல் பூக்கள்2000 
ஈர நிலம்2003 
கண்களால் கைது செய்2004 
கோதா ஜீவித்தாலு(தெலுங்கு)  
ஆராதனா(தெலுங்கு) 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருதுகளும் பாராட்டுகளும்
திரைப்படத்தின் பெயர்வெளியான ஆண்டுவிருதுகள்
16 வயதினிலே1977மத்திய அரசின் சிறந்த பாடலுக்கான தேசிய விருது. பாடல்-செந்தூரப்பூவே
கிழக்கே போகும் ரயில்1978சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
புதிய வார்ப்புகள்1979தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்)1980எஸ்.ஐ.எஃப்டி-யின் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருக்கான விருது
நிழல்கள்1980இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
அலைகள் ஓய்வதில்லை1981தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 19811. சிறந்த இயக்குநருக்கான ஸ்வர்ண கமலம் மற்றும் சித்தாரா விருது
2. ஆந்திர மாநில அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
3. தெலுங்கில் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான விருது
புதுமைப்பெண்1984சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
முதல் மரியாதை1985சிறந்த இயக்கநர், தமிழில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடலை இயற்றியது ஆகியவற்றுக்கான தேசிய விருது
கடலோரக் கவிதைகள்1986இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
வேதம் புதிது1987சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
கருத்தம்மா 1994குடும்பம் மற்றும் சமூக பொதுநலனைக் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
அந்தி மந்தாரை1996சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது
கடல் பூக்கள்20001. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது
2. சாந்தாராம் விருது: 7 விருதுகள்(சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட)
தமிழக அரசின் கலைமாமணி விருது
இவற்றுடன் சாந்தோம். சதங்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ரோட்டரி கிளப், ஜெய்சி போன்ற சமூக அமைப்புகள், இலக்கிய அமைப்புகள்,
சினிமா சங்கங்கள் வழங்கிய பல்வேறு பரிசுகளும் விருதுகளும்
தமிழ் சினிமா மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு இவர் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, முரசொலி அறக்கட்டளை இவருக்கு 'அண்ணா விருது'ம் ரூ.10,000/- ரொக்கமும் வழங்கியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய நடிகர், நடிகையர்கள்
சத்யஜித் (16 வயதினிலே)சுதாகர்
பட்டாளத்து விஜயன்நிழல்கள் ரவி
டைரக்டர் (ராபர்ட்) ராஜசேகர்கே. பாக்யராஜ்
டைரக்டர் ரா. சங்கரன்கவுண்டமணி
ஜனகராஜ்சந்திரசேகர்
கல்லாப்பெட்டி சிங்காரம்கே.கே. சௌந்தர்
ஷியாம் சுந்தரகார்த்திக்
கண்ணன்'மண்வாசனை' பாண்டியன்
தியாகராஜன்லல்லு அலெக்ஸ்
தீபன்ராஜா (வெங்கடேஷ்)
டாக்டர் ராஜசேகர்மலேசியா வாசுதேவன்
தாசரதிராஜா
வசீகரன்மனோஜ்
ராதிகாரத்தி அக்னிஹோத்ரி
வடிவுக்கரசிஉஷா
ராதாரேவதி
அருணாவிஜயசாந்தி
ரோகிணிசுபத்ரா
அனிதாபதன்ஸ்ரீலதா
லட்சுமிகலாரஞ்சனி
ரேகாஜென்ஸி
பானுப்ரியாகமலா காமேஷ்
அனுராதா வாசுதேவ்ரஞ்சிதா
உமாசிந்து
பிரியாமணிபாலகுரு
மணிவண்ணனகே. ரெங்கராஜ்
மனோபாலாஜே. ராமு
சித்ரா லட்சுமணன்மனோகரன்
க. சந்திரசேகர்திலகர் மருது
நிவாஸ்கணேச பாண்டியன்
பி. கண்ணன்லதா ரஜினி காந்த்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -