பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்
பெயர்மனோரமா
தந்தை பெயர்காசி கிளார்க்குடையார்
தாயார் பெயர்ராமாமிர்தம்மாள்
பிறந்த ஆண்டு1939
பிறந்த ஊர்ராஜமன்னார்குடி
வளர்ந்த ஊர்காரைக்குடி அண்மையில் உள்ள பள்ளத்தூர்
முதன் முதல் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய ஆண்டு1952 முதல் நாடகம் 'யார் மகன்?'. நடித்த மொத்த நாடகங்கள் சுமார் 5000க்கும் மேல்.
திரையுலகில் முதல் படம் நடித்த ஆண்டு1958 முதல் படம் 'மாலையிட்ட மங்கை'. நடித்த மொத்த திரைப்படங்கள் 1200க்கு மேல். உலக சாதனையாளர் பட்டியலில் 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நடித்த மொழிகள்தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்.
தயாரித்த படம்இவர் தயாரித்த 'தூரத்துச் சொந்தம்' படம் இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இசை நிகழ்ச்சிஇவர் தனது மகன் பூபதியுடன் இணைந்த 'மியூசிரமா' என்ற இசைக் குழுவின் மூலம் இந்தியாவிலும் உலகில் பல நாடுகளிலும் பாடி, நடித்து, நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
நடித்துள்ள டி.வி. தொடர்கள்'காட்டுப்பட்டிச் சத்திரம்', 'அன்புள்ள அம்மா', 'தியாகியின் மகன்', 'வானவில்', 'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அன்புள்ள சிநேகிதி', 'அல்லி ராஜ்யம்', 'அவள்', 'ரோபோ ராஜா', 'மனுஷி', 'வா வாத்தியாரே', 'டீனா மீனா' போன்ற இன்னும் பல.
நடிப்பில் பெற்ற பரிசுகள்1. சிறந்த குணச்சித்திர நடிகை, புதிய பாதை படத்தில் நடித்ததிற்காக 1990ல் இந்திய அரசு பரிசு.
 2. 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளதைப் பாராட்டி தமிழ் நாடு பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் 'TANSJA' விருது.
 3. தெலுங்கு 'Sambayya' படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி 'AFJA' விருது.
 4. சிறந்த குணச்சித்திர நடிகையாக அண்ணா விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது ஆகியவை தமிழக அரசினால் வழங்கப்பட்டன.
சிறப்பு விருது மற்றும் பட்டங்கள்1. இந்திய குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ, தமிழ் நாடு அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம், நவரச நாயகி, மக்கள் கலை அரசி, முத்தமிழ் வித்தகி.
 2. மலேசிய அரசின் டத்தோ சாமுவேல் 'சரித்திர நாயகி' விருது. (டத்தோ சாமுவேல் சாதனையாளர் விருது).
 3. அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. விருது.
 4. கேரள கலா சாகர் விருது.
 5. பிலிம் ஃபேன்ஸ் விருது 28, சாதனையாளர் விருது.
 6. பிலிம் ஃபேர் சாதனையாளர் விருது.
 7. சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
ஐந்து முதல்வர்களுடன் நடித்தது 'அண்ணா', 'கலைஞர்', 'புரட்சித் தலைவர்', 'ஜெயலலிதா', தெலுங்கில் 'என்.டி.ஆர்'.
இந்த சாதனை நாயகியின் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -