- Back to Home »
- காகபுசுண்டர் , குண்டலினி , கொங்கணவர் »
- குண்டலினியும் சித்தர்களும்...
குண்டலினி பற்றிய தொடர் இன்று முதல் துவங்குவதாக கொள்ளலாம். இதுவரை பார்த்த அடி ஆதார புரிதல்கள் இனி உதவியாக இருக்கும். சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர். சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என