- Back to Home »
- உறக்கம் , தேரையர் »
- உறக்கமும், தேரையரும்... குறுந்தொடர்.
"உணவு, உடை, உறைவிடம்" ஆகிய மூன்றும் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் என்பதை நாமறிவோம். இவற்றைத் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மூன்று முக்கிய அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அவை முறையே "ஊக்கம், உழைப்பு, உறக்கம்". இவற்றை ஒரு மனிதன் தன்னளவில் எவ்வாறு கையாளுகிறானோ அதைப் பொறுத்தே தனிமனித இருப்புகள் தீர்மானமாகின்றன.
பசி, தாகம், உறக்கம் ஆகிய மூன்றுமே நம் உடல் நலத்தினை தீர்மானிக்கின்றன. இதில்