சென்னை

தமிழக சட்டசபையில் சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ) ஆகியோர் 

பீடி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைப்பதற்கான ஒப்பந்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லப்பாண்டியன் கூறியதாவது,


பீடித் தொழிலாளர்களிடம் முறைப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது
. அதில் தீர்வுகாணப்பட்டதால் பீடித் தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரைவில் வாரியம் திருத்தி அமைக்கபட்டு
தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -