சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்தும் நித்தியானந்தா.


தமிழ்நாட்டில் பல்வேறு ஆதினங்கள் ஒரு காலத்தில் மக்களுக்கு பல்வேறு சமூக பணிகளை செய்தததை மறுக்கமுடியாது,தற்போதைய சூழ்நிலையில் ஆன்மீகம் என்ற போர்வையில் நடக்கும் சம்பவங்களினால் பெரிதும் பாதிக்கபடுவது இன்றைய இளைஞர்கள்தான்.பல்வேறு நல்ல கருத்துகளை,அது உடல் உள்ளம் சார்ந்த விஷயமானும் சரி எந்தவிதமான கேள்விகளுக்கும் ஆன்மீகத்தில் இடம் உண்டு,ஆனால் தற்போது இந்த சாமியார்கள் என்ற பெயரில் இவர்களின் செயல்பாடுகளை சற்று கூர்ந்து நோக்கினால் இதில் சிறிதும் சமூக அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரியும்,இதனை நாம் தெரிவித்தால் நாங்கள் பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்திவருகிறோம் என்று பொத்தாம் பொதுவாக தங்களின் கருத்துகளை பாமர மக்கள் மட்டும்ல்ல,படித்தவர்கள் கூட நம்பும்படி தெரிவிப்பார்கள்.
சரி சமீபத்திய நாடகத்திற்க்கு வருவோம்,மதுரை ஆதீனமாக நித்தியானந்தா தேர்வு.
திருவண்ணாமலையின் பெயரை உச்சரித்தாலே புண்ணியம் என்று குறிப்பிட்டு சொல்ல கூடிய இடத்தில் பிறந்த இவரின் மீது பல்வேறு குற்றசாட்டுக்கள்,,இது அனைத்தும் உங்களுக்கு தெரியும் தீடீரென ஏன் மதுரை ஆதீனமாக வேண்டும் நித்தியானந்தா?
அவர் மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பை ஏற்படுத்த செய்த நீண்டகால சிந்தனையின் வெளிபாடுதான் இந்த இளைய ஆதீன முடிசூட்டு விழா.எப்படி
சென்னை, மாகாணமாக முன்பு இருந்தபோது 15.09.1880 தேதியிட்டு அரசாங்கம் ஒரு உத்தரவு ஒன்றை போட்டிருந்தது.அதாவது நீதித்துறை சட்டம் எண் 641ன் படி,ஒரு மடத்தின் குருமகா சந்நிதானமாக இருக்கும் ஒருவரை எக்காரணம் கொண்டும்,நீதிமன்றமே காவல்துறையோ விசாரணைக்கு அழைக்கமுடியாது.அந்த சட்டம் இன்னும் நிலுவையில் இருக்கிறது.அந்த அடிப்படையில் மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கபட்டிருக்கும் நித்தியானந்தா விரைவில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக ஆகி விடுவார்,
அப்போது எதற்காகவும் நீதிமன்றமே,காவல்துறையோ அழைக்க முடியாது,
இப்போது புரிகிறதா நித்தியானந்தாவின் திட்டம்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -