- Back to Home »
- தொகுதி நிதி ஒதுக்கவில்லை விஜயகாந்த் குற்றசாட்டு »
- தொகுதி நிதி ஒதுக்கவில்லை விஜயகாந்த் குற்றசாட்டு !
திருச்சி தொகுதி நிதி ஒதுக்கவில்லை என்று விஜயகாந்த் பேசினார். திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு துவக்கப்பள்ளியை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார்.
இதன் பின்னர் அவர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: எம்.எல்.ஏ., தொகுதி எப்படி உள்ளது என்பதை பற்றி அறியவும், மக்கள் எந்தளவு பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை பற்றி அறியவும் தான் இங்கு வந்துள்ளேன்.
ஓட்டுக்காக நான் வரவில்லை. தொகுதி நிதியாக வழங்கப்படும் 2 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை. சட்டசபைக்கு விஜயகாந்த் வரவில்லை என கூறுகிறார்கள். சட்டசபைக்கு எதிர்கட்சியாக இருக்கும்போது தி.மு.க., தலைவர் கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபைக்கு வந்துள்ளார்களா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ராமஜெயம் கொலை வழக்கிலும், திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கிலும் இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை புதுகோட்டை இடைதேர்தல் வேட்பாளரை சரியான நேரத்தில் அறிவிப்போம்.அதிமுக போல் அவசரபட்டு அறிவிக்கமாட்டோம், சரியான நேரத்தில் வேட்பாளரை தேமுதிக அறிவிக்கும்,இவ்வாறு பேசினார்.
