சென்னை

மே 2: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அன்று காலை தேர்வு முடிவுகள் இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் சுமார் 8.2 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.

தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 2 முதல் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.வழக்கமாக தொடங்குவதை விட, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாகத் தொடங்கியது. அதன் காரணமாக, இந்த ஆண்டு சற்று தாமதமாக முடிவுகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -