- Back to Home »
- காவலருக்கு 36 ஆயிரம் குடியிருப்புகள் பேரவையில் முதல்வர் அறிவிப்பு »
- காவலருக்கு 36 ஆயிரம் குடியிருப்புகள் பேரவையில் முதல்வர், அறிவிப்பு
சென்னை
காவலர்களுக்கு 36 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்தார்,
தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்,
மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது"", அல்லும் பகலும் அயராது மக்களின் உயிரையும், உடைமையையும் பாதுகாக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு தங்கள் சொந்த
நலன்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருப்பதில்லை.
மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் நலன் காக்கும் வண்ணம், அவர்களுக்கென ஒரு சொந்த இல்லம் கட்டித் தரும் பொருட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், """"உங்கள் சொந்த இல்லம்"" திட்டத்தின் கீழ் இதுவரை 12 இடங்களில் 1,985 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
""""உங்கள் சொந்த இல்லம்"" திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு போதுமான அளவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்த நான், கடந்த 24.4.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, """"காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க ஆவன செய்ய இந்த அரசு ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தும்"" என அறிவித்து இருந்தேன்.
இதன்படி, """"உங்கள் சொந்த இல்லம்"" திட்டத்தின் கீழ், காவல் துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் சொந்த வீடு கட்டித் தர தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் நடவடிக்கை எடுக்கும்
. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலமும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கென ஒதுக்கீடு செய்து தரப்படும். கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதி கழகம் மேற்கொண்டு வீடுகளை கட்டிக் கொடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர்கள், தலைமைக் காவலர்கள், தீயணைப்போர், முன்னிலை தீயணைப்போர், மற்றும் உதவி நிலைய அலுவலர்கள் ஆகியோருக்கு 650 சதுர அடி கொண்ட வீடுகளும்; உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், நிலைய அலுவலர்கள் மற்றும் உதவிக் கோட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு 850 சதுர அடி கொண்ட வீடுகளும்; காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோட்ட அலுவலர்களுக்கு 1100 சதுர அடி கொண்ட வீடுகளும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் லாப நோக்கமின்றி கட்டித் தரப்படும்.
இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 36,000 குடியிருப்புகள் கட்டப்படும். காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இட விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்படும்.
இந்த வீடுகளுக்கான விலையை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அவரவர் விருப்பத்திற்கேற்ப முழுவதும் ரொக்கமாகவோ அல்லது மாதத் தவணையிலோ செலுத்த வழிவகை செய்யப்படும்.
இதன் மூலம் காவல் துறையினர் தமக்கென சொந்த வீடு கட்ட இயலவில்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, மக்கள் சேவையில் காவல் துறையினர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வழி வகுக்கும்
மேலும் காவல் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், காவலர்களுக்கும், தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இந்த அரசு வீட்டு வசதி செய்து கொடுக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அத்துடன், சிறைத் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் அதைப்போலவே வீட்டு வசதி செய்து தரப்படும், சொந்த வீடுகள் கட்டித் தரப்படும்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில் பெறக்கூடிய கேன்டீன்களை இந்த அரசு அமைத்துள்ளது. இந்தக் கேன்டீன்களை காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். இப்போது சிறைத் துறையில் பணிபுரிபவர்களும் இந்தக் கேன்டீன்களைப் பயன்படுத்தி அதன்மூலம் பயன்பெறலாம்