- Back to Home »
- கதர் வாரியத்திற்க்கு 10 கோடி முன்பணம் »
- கதர் வாரியத்திற்க்கு 10 கோடி முன்பணம்
சென்னை
கதர் வாரியத்திற்க்கு ரூ 10 கோடி முன்பணம் ஒதுக்கபட்டுள்ளதாக அமைச்சர் செந்துர் பாண்டியன் தெரிவித்தார்,
தமிழக சட்டபேரவையில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் மானிய கோரிக்கை விவாததிற்க்கு பதில் அளித்து அமைச்சர் செந்துர் பாண்டியன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
கதர் உற்பத்தியை அதிகரிக்க வாரியத்திற்க்கு ரூ,10 கோடி முன்பணம் அரசால்
அனுமதிக்கபடும்.4400 தேனீ குடும்பங்களை உருவாக்க ரூ,10 இலட்சம் வழங்கபடும்.30 இலட்சம் செலவில் வாரியத்தின் 6 தொழில்கூட்டுறவு சங்கங்கள் புதுபிக்கபடும்.
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கதர் விற்பனை நிலையங்கள் புதுபிக்கபடும்.வாரியத்தில் பணியாற்றிய 719 பணியாளர்கள் மிகை பணியாளர்கள் என அறிவிக்கபட்டதால் அரசின் பிற துறைகளில் பணிபுரிந்துவருகின்றனர்.
வாரியத்தில் பணியாற்றிய பணிகாலங்களை பாதுகாக்கும் வகையில் அவர்கள் பணிபுரியும் துறையின் ஓய்வூதிய பயன்களுக்கு கணக்கில் எடுத்துகொள்ளபடும்.வாரிய பணியாளர்களின் ஒய்வூதியதாரர்களின் இடர்பாடுகளை நீக்க நிலுவை ஓய்வூதிய பயன்கள் வழங்க ரூ.36,86 கோடி அரசால் அனுமதிக்கபடும்.
இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டார்.