மயிலாடுதுறை : மதுரை ஆதினமாக நித்யானந்தாவை நியமித்தது தொடர்பாக, இன்னும் பத்து நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரை ஆதினத்துக்கு மற்ற சைவ மட ஆதினங்கள், ஆதினகர்த்தர்கள் கூடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதினத்தில் சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நித்தியானந்தா விவகாரம் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியது. அப்போது பேசிய பலரும், நித்தியானந்தா நியமனத்தை இன்னும் பத்து தினங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மதுரை ஆதினம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லைஎன்றால், இது தொடர்பாக அனைத்து ஆதினங்களும் சேர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வலியுறுத்துவோம் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -