இந்தியாவி்ன் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணை இன்று ராஜஸ்தானில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
பிரம்மோஸ் ஏவுகணையானது இந்திய-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் தயாரிக்கப்பட்டதாகும். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளில் பிரம்மோஸ் முக்கியமானது.
இந்நிலையில் ராணுவபயன்பாட்டிற்காக 290 கி.மீ. தொலைவில் சென்று இலக்கினை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை , இன்று ராஜஸ்தானின் ‌பொக்ரான் நகரில் உள்ள ஜெய்சல்மார் ,ராணவ ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவத்துணை தளபதி ஸ்ரீகிருஷ்ணா சிங், ராணுவ இயக்குனர் ஜெனரல் ஏ.கே.செளத்ரி உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -