புது டெல்லி : தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்தால் தேர்தலை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சனாதன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ ஜிது பட்நாயக்கின், வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும்தேர்தலின் போது வேட்பாளர் இறந்ததால், அந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார்.
இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளர் தேர்தலுக்குமுன் இறந்தால் அந்த தேர்தலை ரத்து செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -