- Back to Home »
- அரசு பல் மருத்துவக் கல்லூரி புதிய கட்டடம் திறப்பு »
- அரசு பல் மருத்துவக் கல்லூரி புதிய கட்டடம் திறப்பு
சென்னை,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை - தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடம் ஒரே நேரத்தில் 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதி கொண்டது. தற்பொழுது இயங்கி வரும் பழைய கட்டடத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி புறநோயாளிகள் பிரிவு, இதர வசதிகளுடன் முழுமையாக இப்புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். இப்புதிய கட்டடத்தின் பயனாக தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கூடிய மற்றும் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 முதல் 1500 நோயாளிகளுக்கு அனைத்து வகையான பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதியுள்ள மருத்துவமனை என்ற சிறப்பினை பெறும்.