சென்னை,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் இன்றுதலைமைச் செயலகத்தில், தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர். ராஜகோபால், காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், காவல்துறை தலைமை இயக்குநர் (பயிற்சி) லத்திகா சரண், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் து.மு. திரிபாதி, ஆகியோர் காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான 6 கோடியே 47 லட்சத்து 8 ஆயிரத்து 156 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்கள்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 135 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து 971 ரூபாயாகும்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 135 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து 971 ரூபாயாகும்.
