- Back to Home »
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ 1.50 கோடி போதைப் பொருள் சிக்கியது »
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ 1.50 கோடி போதைப் பொருள் சிக்கியது
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் ரூ 1.50 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
முன்னதாக சென்ட்ரலில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தினர். அப்போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும்வசதி கொண்ட பெட்டியில் பாலுசாமி(52), அக்பர் அலி(45), செஜாபர் அகமது(35) ஆகியோரிடம் 6 கிலோ மதிப்புள்ள எப்டிரின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 3 பேரும் திருச்சியைச் சேர்ந்தவர்களாவர். இந்த போதைப் பொருளை தில்லிக்கு கொண்டுசென்று அங்கிருந்து மலேசியா கொண்டுசெல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 1.50 கோடி என போலீசார் தெரிவித்தனர்