மும்பை 

இந்தியர்கள் தென்ஆப்ரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, அதனை கொண்டாடும் விதமாக, இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 30ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுதொடர்பாக, தென்ஆப்ரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள அழைப்பிதழை ஏற்று இப்போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள அணிவீரர்களே இதில் இடம்பெறுவர். டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத சச்சினுக்கு பதிலாக ராபின் உத்தப்பா இதில் இடம்பெறுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -