புதுடில்லி
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் அடுத்த மாதம் காலியாகவுள்ள 58 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி, ராஜ்யசபா பதவிக்கான வேட்புமனு மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 19. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி மார்ச் 22. மார்ச் 30ம் தேதி தேர்தல் நடைபெறும். அருண் ஜேட்லி, ரஷீத் ஆல்வி, ஹேமமாலினி ஆகியோர் பதவி நிறைவடையும் உறுப்பினர்களில் முக்கியமானவர்கள்.