- Back to Home »
- பெண்குலத்துக்கு எதிரானது - பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் குற்றச்சாட்டு »
- இயக்குனர் மணிமேகலை அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தது பெண்குலத்துக்கு எதிரானது - பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் குற்றச்சாட்டு!
இயக்குனர் மணிமேகலை அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தது பெண்குலத்துக்கு எதிரானது - பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் குற்றச்சாட்டு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய செய்தி பத்திரிகைகளில் வெளியானனது. அதைத் தொடர்ந்து பல்கலைக் கழக மாணவர்களிடம் விசாரித்த போது இயக்குனர் மணிமேகலை மீது திட்டமிட்டு சிலர் களங்கத்தை ஏற்படுத்த முயல்வதை அறிய முடிகிறது.
இது தொடர்பாக, இயக்குனர் மணிமேகலை அவர்களை தொடர்புகொண்டபோது " எனது சமூக பணிக்கு தொடர்ந்து இடையூறு ஏற்ப்படுத்தி இப்போது அவர்களுக்கான பலத்தை நிரூபித்துள்ளார்கள்.என்னுடைய நிலையறிந்த மாணவர்களும் , பணியாளர்களும் இந்த செய்தியறிந்து போராட்டங்களையும், வகுப்பு புறக்கணிப்பையும் நடத்திவருகின்றனர். இந்நிலையில் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவெனில் எப்படிப்பட்ட சூழலிலும் எனது பெண் சமூகத்திற்கான கல்விப் பணியையும் , சமூகப்பணியும் இடைநிறுத்த மாட்டேன், என்றும் எனது பணி தொடரும்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மகளிரியல் ஆராய்ச்சி மாணவர்களை தொடர்பு கொண்டபோது " இயக்குனரும் , பெண்ணுரிமை , பெண்கள் வாழ்வியல் கருத்துக்களில் தலை சிறந்தவருமான இயக்குனர் மணிமேகலை அவர்களின் சமூகப்பணிக்கு இழுக்கு ஏற்ப்படுத்தும் நோக்கில் ஒரு சிலர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.அதன் முயற்சியின் விளைவே இந்த தற்காலிக பணி நீக்கம். இந்த பணி நீக்கத்திற்கு காரணமாக அவர்கள் தரப்பில் கூறப்படுவது நிதி மோசடி மற்றும் பணியாளர்களை துன்புறுத்தல் என்பதாகும். இந்த அபத்தமான குற்றச்சாட்டை எண்ணி திருச்சி பாரதிதாசன் ஆராய்ச்சி மாணவர்களாகிய நாங்களும் , பணியாளர்களும் மிகுந்த வேதனையை அடைந்திருக்கின்றோம்.
வன்மையாக கண்டிக்கத் தக்கது :
சமூகத்தோடு இணைந்து சேவையாற்றும் பல்துறை அறிவாற்றல் கொண்ட எங்களது இயக்குனர் கோபமாய்க் கூட யாரிடமும் பேசியது கிடையாது. இந்தச் சமூக வாழ்வியல் முறையில் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்ளும் இயக்குனர் தனது பொருளை இந்த சமூகத்திற்காக எவ்வளவு கொடுத்திருக்கின்றார் என்பதை நாங்கள் அறிவோம். மாணவர்களும் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாகவும் , அவரை பின்பற்றியும் இருக்கையில் யாரை துன்புறுத்தினார் என்பது கேள்வியாகியிருகிறது.
சின்டிக்கேட் நிர்வாகிகள் தங்களது நிலையை தாழ்த்திக் கொண்டுள்ளனர்:
பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் விரைந்து முடிக்க வேண்டிய , கவனத்தில் கொள்ளவேண்டிய பல குறைகள் , முறைகேடுகள் இருக்கையில் தனி நபரின் மீது வீண் பலி சுமத்தி அதன் மூலம் பல்கலை கழகத்தில் ஆதாயம் பெற முயலும் சின்டிக்கேட் நிர்வாகிகள் தங்கள் நிலையை தாழ்த்திக் கொண்டனர் மகளிரியல் துறையில் ஆக்கப்பூர்வ செயல்களை மேற்கொண்ட இயக்குனர் மணிமேகலை அவர்களுக்கு இப்படி திட்டமிட்ட அவப்பெயரை ஏற்படுத்தியது
நிர்வாகத்திற்கு எதிராக நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும். அதன் ஆரம்பமாக வகுப்பு புறக்கணிப்பு செய்து வருகின்றோம். உண்மை நிலை அறிந்து சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு நீதி வழங்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் " என்று சமூக வாழ்வியலில் தேறிய குரலில், வார்த்தையில் கூறி முடித்தனர்.
-
தொடரும்...
