- Back to Home »
- ஆசிரியை குத்திக்கொலை 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல் »
- ஆசிரியை குத்திக்கொலை 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
சென்னை
ஆசிரியை குத்திக்கொலை
9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
சென்னை மண்ணடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 42). இவர் பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இன்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் இந்திப்பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது. 9-ம் வகுப்பில் படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்பறையில் புகுந்து
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை உமா மகேஸ்வரியை
சரமாரியாக குத்தினான், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை உமா மகேஸ்வரி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.சினிமாவில் வருவது போல் நடைபெற்ற சம்பவத்தை பார்த்து
வகுப்பறைகளில் இருந்த மற்ற மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஓடி வந்தனர். ஒட முயன்ற இர்வான்னை மடக்கிப் பிடித்தனர். பள்ளி வளாகத்திலேயே மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது