நாமக்கல், 

தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

 இதுகுறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-

வாடகையை உயர்த்தி வழங்குதல், கூடுதலாக டேங்கர் லாரிகளை இணைக்க வேண்டும்வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டதால், எண்ணை நிறுவனங்கள் புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றி லாரி வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்கனவே ஓடும் கியாஸ் டேங்கர் லாரியுடன் கூடுதலாக 600 டேங்கர் லாரிகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்  என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை இது வரை எண்ணை நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை. எனவே இன்று நள்ளிரவு 12 மணி முதல் கியாஸ் டேங்கல் லாரிகள் ஓடாது. எங்கள் கோரிக்கைகளை எண்ணை நிறுவனங்கள் நிறைவேற்றும் வரை இந்தப்போராட்டம் தொடரும்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -