சட்டபேரவையிலிருந்து திமுக வெளியேற்றம்
சென்னை
தமிழக சட்டபேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டனர்
தமிழகசட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்க்கு
பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா
சில பெரிய மனிதர்கள் அவையில் பேசும் வாய்ப்பு இருந்தும்
அதை பயன்படுத்தி கொள்ளமல் ஆளுனர் உரைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சில
விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள் என்று பேசியபோது
துரைமுருகன் பேச எழுந்தார்
அதற்க்கு சபாநாயகர் ஜெயகுமார்
முதல்வர் பதில் உரையை படித்துமுடித்தவுடன் நீங்கள் பேசலாம் என்று கூறியபோதும்
தொடர்ந்து பேச வாய்ப்பு அளிக்க திமுக உறுப்பினர் எழந்துநின்று கூச்சல் எழப்பினர்
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது
தொடர்ந்து ஆளும் கட்சியினருக்கும்
திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டதால் சபாநாயகர் திமுக உறுப்பினர்களை பார்த்து நீங்கள் வெளிநடப்பு செய்யவேண்டும்
என்ற நேக்கத்தில் வந்திருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று அமைதிபடுத்தினார்
இருந்தபோதிலும்
திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் கூச்சல் போட்டதாலும் முதல்வரை பேச விடாமல்
செய்தாதல் சபாநாயகர் திமுக உறுப்பினர்கள்
அனைவரையும் வெளியேற்றுமாறு
உத்தவிட்டார் சாபை காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்