முல்லை பெரியாறு அணை விவகாரம்
பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்



பிரதமர் மன்மோகன்சிங்குக்கு,  ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை அளவிட 'நிகழ் நேர தண்ணீர் அளவிடும் கண்காணிப்பு அமைப்பை' நிறுவ கேரள அரசு முடிவு செய்திருப்பதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

. அந்த தகவலை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் அதிகரிப்பை கண்காணித்து அளவிட, நவீன கருவியை
 அங்கு நிறுவ, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சகத்துடன் கேரளா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது
.

முந்தைய கடிதங்களில் நான் குறிப்பிட்டது போல, முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் வீணான பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது

. முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனவே, தண்ணீர் மட்டத்தை 142 அடியாக பராமரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், கேரள அரசு மக்கள் மனதில் தேவையற்றை அச்சத்தை பரப்பி வருகிறது.

 முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட அதிகார குழு விரைவில் அறிக்கை செய்ய உள்ளது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில், 'நிகழ் நேர தண்ணீர் அளவிடும் கண்காணிப்பு அமைப்பு' ஒன்றை நிறுவும் கேரள அரசின் நடவடிக்கை,
 முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சி ஆகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கோர்ட்டில் உள்ள நிலையில்
,
 இந்த முயற்சி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகும். முல்லைப் பெரியாறு அணையும், அதன் முக்கிய கட்டு மானங்களும் தமிழக அரசுக்கு சொந்தமானது மட்டுமின்றி, அதை தமிழக அரசே பராமரித்தும் வருகிறது.

 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்துடன் சேர்ந்து, முல்லைப் பெரியாறு அணையில், 'நிகழ்நேர தண்ணீர் அளவிடும் கண்காணிப்பு கருவி'யை நிறுவ கேரள அரசு எடுத்து வரும் முயற்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது மட்டுமின்றி, அரசியல் அமைப்பு சட்டத் தையும் மீறிய செயல் ஆகும்.

எனவே, கேரள அரசுடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சகம் ஏதாவது ஒப்பந்தம் செய்திருந்தால், அதை ரத்து செய்ய தாங்கள் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையில் தலையிடும் எந்த நடவடிக் கையிலும் ஈடுபட வேண்டாம் என, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைக்கும்
, கேரள அரசுக்கும் உத்தரவிடு மாறும் தங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும் முல்லைப்பெரியாறு அணை பகுதியில்
, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்
. இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -