- Back to Home »
- கமல் - ஷங்கர் புது கூட்டணி..!
'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனது அடுத்த படத்தைப் பற்றிய தீவிர ஆலோசனையில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன். ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பெரும்பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் இந்தப்படத்தை ஆரம்பத்தில் கமலே இயக்குவதாக இருந்ததாம். ஆனால் சமீபத்தில் 'நண்பன்' பிரத்யேக திரையிடல் காட்சியில் இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த கமல் தனது முடிவை மாற்றிக்கொண்டு அப்படத்தை ஷங்கர் இயக்கினால் இன்னும் பிரமாண்டமாக இருக்குமே என்று யோசித்தாராம். தனது இந்த முடிவை அவர் உடனே தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு தெரிவிக்க , குஷியாகப் போன அவர் உடனே ஏ.ஆர். ரகுமானுக்கு போனைப்போட ரகுமானும் மேற்படி கூட்டணியில் வேலை பார்க்க உடனே தனது சம்மதத்தைத் தெரிவித்தாராம்.
படத்தின் கதாநாயகி பற்றிய பேச்சு எழுந்த போது, ஷங்கர் கமல் இருவருக்குமே தோன்றிய பெயர் காத்ரீனா கைஃப். இப்படி நாளுக்கு நாள் கூட்டணி களை கட்டிக்கொண்டிருக்கும் இப்படத்துக்கு தனது முந்தைய படம் ஒன்றுக்கு இடப்பட்ட 'தலைவன் இருக்கிறான்' தலைப்பையே சூட்ட இருக்கிறாராம் கமல்.