கச்சத்தீவை மீட்கும்வரை

நான் ஓய மாட்டேன் முதல்வர் திட்டவட்டம்



சென்னை

தமிழகசட்டபேரவையில்ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கட்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்ஆறுமுகம் பேசும் போது

ஆளுனர் உரையில்மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்பதை நாங்கள் ஒத்துகொள்கிறோம் மதிகஅதிகரங்களை மாநில அரசுக்கு வழங்கவேண்டும் என வலியுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்தமிழ்மொழியை ஆட்சிமொழி ஆக்குவோம் என்று செல்லி எதையும் சென்ற ஆட்சியாளர்கள் செய்யவில்லைஉணவு பொருட்களான கோதுமை ,பருப்பு ரவை,ஆகியவற்றையும் மத்தியஅரசு குறைவாக அளித்து மக்களிடையேமாநில அரசுக்கு கெட்டபெயர் ஏற்றபடுத்தவேண்டும் என்று செயல்படுகிறது

தானே புயலலுக்குபாதிக்கபட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு யானைக்கு சேலை பெறி பேடுவதுபோல் நிதியை அளித்துள்ளது  இதற்காக மத்தியஅரசை கண்டிக்கவேண்டும்

மாநிலத்திலிருந்துசென்றுள்ள அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் ஆனல் இங்கு இருபவர்கள் இது வேண்டும் அதுவேண்டும் என்று கேட்கிறார்கள் எப்படி கேட்கிறார்கள் என்றே தெரியவில்லை


தமிழக மினவர்கள்தொடர்ந்து தாக்கபடுகிறார் இதற்க்கு ஒரே தீர்வு கச்ச தீவை மீட்பதுதான் மத்திய அரசு இதற்க்குஇணக்கமாக இல்லை என்றால் மக்கள் மத்தியில் அம்பலபடுத்த வேண்டும் என்று பேசியபோது குறுக்கிட்டமுதல்வர் ஜெயலலிதா





'தானே'புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000கோடி மாநில அரசு கேட்டு,வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை உறுப்பினர்  இங்கேகுறிப்பிட்டு, அது யானைப் பசிக்குசோளப் பொறி போடுவது போன்றதாகும்என்று குறிப்பிட்டார்.  இந்தரூ.500 கோடிகூட எப்படி கொடுத்தார்கள் என்பது  உறுப்பினர்தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.  அதாவதுஇந்தப் புயல் அடித்த பின்னர்,உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். முதல் நாள் தொடங்கி தொடர்ந்துமத்திய அரசை வற்புறுத்திக் கொண்டேயிருந்தோம்.  நிவாரணப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கித் தாருங்கள்,நிதி உதவி செய்யுங்கள் என்றுதிரும்பத் திரும்ப கேட்டு, மத்தியஅரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.  நிதிஉதவியும் வரவில்லை.  சரி,இப்படியே நாம் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தால், இது வேலைக்கு ஆகாது,எந்தப் பணியும் நடைபெறாது என்றுமாநில அரசால் முடிந்த தொகைரூ.850 கோடியை ஒதுக்கிவிட்டோம் நிவாரணப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.  அதன்பின்னர் மாநில அரசிடம் போதியநிதியில்லை என்பதற்காக பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டோம்.  மாநிலஅரசு சார்பாக நல்ல மனம்படைத்தவர்கள் அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத்தாராளமாக உதவி செய்யவேண்டும்.                  

,







குறிப்பாக,இந்த தானே புயல் நிவாரணப்பணிகளுக்காக பொதுமக்கள் வாரி வழங்க வேண்டுமென்றுவிளம்பரத்தை நாங்கள் வெளியிட்டோம். அன்றையதினம், காலையில் எல்லா நாளேடுகளிலும், தினசரிகளிலும்இந்த விளம்பரம் வந்தது.  அது  வந்தபிறகு,மத்திய அரசு வெட்கப்பட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.  அன்றுபிற்பகல்தான் இந்த 500 கோடி ரூபாய் தருவதாகஅறிவித்தார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                மேலும்,, இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நம்முடைய தமிழக மீனவர்களைத் தாக்குவதைப்பற்றிஇங்கே குறிப்பிட்டார்.  அதற்குஒரே வழி, கச்சத் தீவைமீட்பதுதான் என்றும் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் பாரம்பரிய      மீன்பிடிஇடங்களில், இலங்கைக் கடற்படையினரால் எவ்வித இன்னலுக்கும் உள்ளாகாமல்மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, தங்கள்வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றார்.  அதற்கானநிரந்தரத் தீர்வு, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுப்பதுதான்.  இதற்கானநடவடிக்கையை நாம்தான் எடுக்க முடியும் என்பதால்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் என்றமுறையில் நான் வழக்குத் தொடர்ந்திருந்தேன்.உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தேன். தற்போது இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் அடிப்படையில், இந்த வழக்கிற்கு மேலும்  வலுவூட்டும்வகையில்,  ஆவணங்களைத்தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த்துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.  தமிழகமீனவர்களின் வாழ்வாதார உரிமையைக் கட்டிக் காக்க, கச்சத்தீவை மீட்கும்வரை நான் ஓய மாட்டேன் என்றுபேசினார்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -